விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், பிரசாந்த் நடித்த செம்பருத்தி, ரகுமான் நடித்த அதிரடி படை போன்ற திரைப்படங்களின் இயக்குநரும் ஃபெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவருமான ஆர்.கே. செல்வமணி லியோ திரைப்படம் குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள லியோ படத்தில் ஒரு பாடலில் இரண்டாயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்றதாகவும், அவர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கப்படவில்லையென்றும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆர்.கே. செல்வமணி விளக்கமளித்துள்ளார்.
லியோ படத்துக்கு ஒரு பாடலுக்கு இரண்டாயிரம் நடன கலைஞர்கள் தேவைப்பட்டனர். இதில் ஃபெப்சி மற்றும் தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள், நடன இயக்குநர்கள் சங்கம் இணைந்து 600 கலைஞர்களை அனுப்பினோம்.
மீதம் 1,400 கலைஞர்கள் தேவைப்பட்டனர். எந்தச் சங்கங்களிலும் உறுப்பினராக இல்லாத ஆனால் நடனத்தைப் பற்றி அடிப்படை புரிதலுள்ள 1,400 கலைஞர்கள் அனுப்பப்பட்டனர்.
இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய், பயணப்படி ரூ.750, ஆறு நாள்களுக்கு சாப்பாடு என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்படி ஒத்திகை உள்பட ஒவ்வொருவருக்கும் அதாவது எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லாத கலைஞர்களுக்கு ஆறு நாள் ஊதியமாக ரூ.10,750/- அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு விட்டது. ஆகவே, நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லை என்று ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
செய்தியை கேட்க: https://youtu.be/NcHxt9Dioao
இதையும் வாசியுங்கள்: சிறுகதை: கனவென்னும் மேகம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்.