சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சி 47வது ஆண்டாக, இந்த ஆண்டும் (2024)ஜனவரி 3ம் தொடங்கியுள்ளது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
வார நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8:30 மணி வரையிலும் விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8:30 மணி வரையிலும் புத்தகக் காட்சி திறந்திருக்கும். இதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.10/-
தமிழ்நாடு அரசு சார்பில் சிறைத்துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், இந்து சமய அறநிலையத் துறை ஆகியவற்றின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்த அரங்குகளின் விவரப் பட்டியல் இந்த ஆண்டு இன்னும் அச்சில் கிடைக்கவில்லை. அவசரமாக குறிப்பிட்ட பதிப்பகங்களை மட்டும் பார்க்க விரும்புகிறவர்களுக்கு சிரமம்.
சில அரங்குகளின் எண்கள்: பள்ளிக்கல்வித்துறை 61-62, விஷ்ணுபுரம் பதிப்பகம் 84-85, கிழக்கு F25, தமிழினி F34, உயிர்மை F36, ஹிக்கின்பாதம்ஸ் F37, டிஸ்கவரி புக் பேலஸ் F55, ஸீரோ டிகிரி 598 C, காலச்சுவடு N2
தினமும் மாலை 4 மணிக்கு மேல் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் தாம் இருப்பதாக எழுத்தாளர் சாரு நிவேதிதா அறிவித்துள்ளார்.
டிசம்பர் 21ம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறும்.
இதையும் வாசியுங்கள்: சிறுகதை: சித்தப்பாவின் வாரிசு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்.