தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் ஐந்தாவது நினைவு நாள் ஆகஸ்ட் 7ம் தேதி அனுசரிக்கப்பட்டது. திருச்செந்தூரை அடுத்த பரமன்குறிச்சியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலைஞரின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவர் கலைஞர் மு. கருணாநிதி. இவர் 2018 ஆகஸ்ட் 7ம் தேதி தம்முடைய 94வது வயதில் மறைந்தார். 2023 ஆகஸ்ட் 7ம் தேதி கலைஞரின் ஐந்தாவது நினைவுநாள் அமைதி பேரணி சென்னையில் நடத்தப்பட்டது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் நினைவுநாள் திமுக தொண்டர்களால் அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த பரமன்குறிச்சி பஜாரில் கலைஞரின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், பிள்ளையார் கோவில் தெரு கிளை கழக செயலாளர் குமார், முருகேசபுரம் கிளை கழக செயலாளர் விஜயகுமார், சீயோன் நகர் கிளை கழக செயலாளர் கிதியோன், தோட்டத்தார்விளை கிளை கழக செயலாளர் ரவி, மறவன்விளை கிளை கழக செயலாளர் கணேசன், அரங்கன்விளை லிங்கம், ஒன்றிய ஆதி திராவிடர் நல அணி அமைப்பாளர் பொன்னுலிங்கம் உள்பட பல திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் வாசியுங்கள்:சிறுகதை: அப்பாவால் முடியாது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-இல் பின்தொடருங்கள்.