சாயர்புரம் போப் கல்லூரி பழைய மாணாக்கர் கூடுகை மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் பழைய மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் போப் கல்லூரி இயங்கி வருகிறது. கிறிஸ்தவ அருட்பணியாளரும் தமிழறிஞருமான ஜி.யூ. போப் சாயர்புரத்தில் பணியாற்றியபோது 1880ம் ஆண்டு ஓர் இறையியல் கல்லூரியை ஆரம்பித்தார். பின்னர் அது சென்னை கிறிஸ்தவ கல்லூரியுடன் இணைக்கப்பட்டது. போப் நினைவு உயர்நிலைப் பள்ளியின் பழைய மாணவர்கள், ஜி.யூ.போப்பின் நினைவாக ஒரு கல்லூரி ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று தீர்மானித்தனர். அதன்படி 1962ம் ஆண்டு சாயர்புரத்தில் போப் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. 2017 – 18ம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்)போப் கல்லூரிக்கு ‘ஏ’ தரச்சான்று வழங்கியது. பல்கலைக்கழக மானிய குழு தன்னாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது.
போப் கல்லூரி பழைய மாணவர்கள் இயற்பியல் நண்பர்கள் கழகம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். ஆண்டுதோறும் சென்னையில் போப் கல்லூரி இயற்பியல் பழைய மாணவர்கள், அனைத்து பழைய மாணவர்களுக்கான சந்திப்பை நடத்தி வருகின்றனர். 2023 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று போப் கல்லூரி இயற்பியல் நண்பர் கழகத்தின் சென்னை பிரிவின் 22வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 15 அன்று மாலை 4 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் போப் கல்லூரி பழைய மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என இயற்பியல் நண்பர் கழக ஒருங்கிணைப்பாளர் ஜெய்கர் சாமுவேல் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசியுங்கள்: சிறுகதை: நன்றியென்பது…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-இல் பின்தொடருங்கள்.