திருச்செந்தூரில் ஆர்டிஓ குரு சந்திரன் கொடியேற்றினார்

ஆகஸ்ட் 15ம் தேதி, இந்தியாவின் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
Spread the love

ஆகஸ்ட் 15ம் தேதி, இந்தியாவின் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். இவற்றில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு நூலகங்களில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல அரசு அலுவலகங்களில் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் குரு சந்திரன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நூலகர் எஸ். மாதவன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

D Bros Media

மாவட்ட மைய நூலகம்

தூத்துக்குடி மாவட்ட மையநூலகத்தில் நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. முதல்நிலை நூலகர் மா.ராம்சங்கர் தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் நூலகர் சங்கரன், விஜயலட்சுமி, லதா, தனுஷ்கோடி, அருணாசலம் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.

வாசிப்பு இயக்கம்

தூத்துக்குடி மாவட்டம் வாசிப்பு இயக்கம் சார்பாக திருச்செந்தூர் மேலரதவீதி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஏ. செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவிகளுக்கு இனிப்புகளையும் பரிசுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியாள், தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கத்தலைவர் கோ.சந்திரசேகர் ஆலோசகர் செந்தில்அதிபன், ஆசிரியை லயோலின் இவர்களுடன் மாணவ மாணவியரின் பெற்றோர் உள்ளிட்ட பொது மக்களும் கலந்து கொண்டனர்.

சிறுகதைகளை வாசிக்க: சிறுகதை: பால்கனி நிலவு

குலசேகரன்பட்டினம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலுள்ள அரசு பொது நூலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் சுடலைமணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நூலகத்தின் வாசகர்களான மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். பங்கு பெற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை குலசேகரன்பட்டின நூலகர் எஸ். மாதவன் செய்திருந்தார்.

சிறுகதையை கேளுங்கள்: https://youtu.be/iieX6h1hbh8

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-இல் பின்தொடருங்கள்.

High Lights Studio