திருச்செந்தூர் விரைவு ரயில் வேகம் அதிகரிப்பு

சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு தினமும் விரைவு ரயில் இயங்கி வருகிறது. சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக இயங்கும் இந்த ரயிலின் வேகம் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினம் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
Spread the love

சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு தினமும் விரைவு ரயில் இயங்கி வருகிறது. சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக இயங்கும் இந்த ரயிலின் வேகம் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினம் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூரிலும் திருச்செந்தூரில் புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை. ஆனால் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூருக்கும் தற்போதைய நேரத்திற்கு முன்னதாகவே வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

D Bros Media

புதிய அட்டவணைப்படி (பழைய நேரம் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது) சென்னை எழும்பூரில் மாலை 4:10 புறப்படும் திருச்செந்தூர் விரைவு ரயில் தாம்பரத்தை 4:38 (4:40)மணிக்கும் செங்கல்பட்டை 5:08 (5:13)மணிக்கும், மேல்மருவத்தூரை 5:33 (5:43)மணிக்கும், திண்டிவனத்தை 5:58 (6:08)மணிக்கும், விழுப்புரத்தை 6:45 (6:50)மணிக்கும், பண்ருட்டியை 7:14 (7:21)மணிக்கும், திருப்பாதிரிபுலியூரை 7:34 (7:41)மணிக்கும், சிதம்பரத்தை இரவு 8:20 (8:40)மணிக்கும், சீர்காழியை இரவு 8:38 (8:59)மணிக்கும், மயிலாடுதுறையை இரவு 9:20 (9:32) மணிக்கும், ஆடுதுறையை இரவு 9:44 (10:05)மணிக்கும், கும்பகோணத்தை இரவு 9:58 (10:18)மணிக்கும், பாபநாசத்தை இரவு 10:11 (10:34)மணிக்கும், தஞ்சாவூரை இரவு 10:33 (11:00)மணிக்கும், பூதலூரை இரவு 10:52 (11:20)மணிக்கும், திருச்சியை இரவு 11:50 (00:05)மணிக்கும், திண்டுக்கல்லை அதிகாலை 1:02 (1:22)மணிக்கும், மதுரையை அதிகாலை 2 (2:20)மணிக்கும், விருதுநகரை அதிகாலை 2:43 (3:03)மணிக்கும், கோவில்பட்டியை அதிகாலை 3:18 (3:41)மணிக்கும், திருநெல்வேலியை அதிகாலை 4:25 (4:45)மணிக்கும், செய்துங்கநல்லூரை அதிகாலை 4:46 (5:07)மணிக்கும், ஸ்ரீவைகுண்டத்தை அதிகாலை 5 (5:21)மணிக்கும், நாசரேத்தை அதிகாலை 5:11 (5:32)மணிக்கும், குரும்பூரை அதிகாலை 5:18 (5:40)மணிக்கும், ஆறுமுகநேரியை அதிகாலை 5:24 (5:46)மணிக்கும், காயல்பட்டினத்தை அதிகாலை 5:29 (5:52)மணிக்கும் சென்றடையும். ஆகவே, சென்னையிலிருந்து செல்லும்போது குறிப்பிடப்பட்டுள்ள 6:10 மணிக்கு முன்னதாகவே திருச்செந்தூரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்லும்போது சாத்தூரில் நிற்காது.

மறுமார்க்கமாக இரவு 8:25 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து புறப்படும் ரயில் திருநெல்வேலியை இரவு 9:30 (9:40)மணிக்கும், சாத்தூரை இரவு 10:44 (10:54)மணிக்கும், மதுரையை அதிகாலை 0:05 (0:20)மணிக்கும், திருச்சியை அதிகாலை 2:40 (2:55)மணிக்கும், தஞ்சாவூரை அதிகாலை 3:33(3:55)மணிக்கும், சிதம்பரத்தை அதிகாலை 5:40 (6:07)மணிக்கும், விழுப்புரத்தை காலை 7:25 (7:40)மணிக்கும், செங்கல்பட்டை காலை 9:08 (9:15)மணிக்கும், தாம்பரத்தை காலை 9:43 (9:50)மணிக்கும் எழும்பூரை காலை 10:25 மணிக்கும் சென்றடையும். திருச்செந்தூரிலிருந்து வரும்போது பூதலூரில் நிற்காது.

அலுவலகம் சென்று திரும்பி ஊருக்குப் புறப்படுவோரின் வசதிக்காக சென்னை எழும்பூரிலிருந்து சற்று தாமதமாக புறப்படும் வண்ணமும், திருச்செந்தூரிலிருந்து சற்று முன்னதாக புறப்படும் வண்ணமும் நேரத்தை மாற்றினால் பயனுள்ளதாக இருக்கும் என்று ரயில் பயணியர் கோருகின்றனர். திருச்செந்தூர் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும் சென்னை – திருச்செந்தூர் மார்க்க பயணிகள் விரும்புகின்றனர்.

திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் அட்டவணை மாற்றம்

வேளாங்கண்ணி சிறப்பு ரயில் கூடுதல் நிறுத்தங்கள்

வேளாங்கண்ணி மற்றும் ஓணம் பண்டிகைகளை முன்னிட்டு வேளாங்கண்ணி – திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 06020 / 06019 என்ற எண்கள் கொண்ட வேளாங்கண்ணி – திருவனந்தபுரம் ரயில், திருவனந்தபுரத்திலிருந்து புதன்கிழமைகளிலும், வேளாங்கண்ணியிலிருந்து வியாழக்கிழமைகளிலும் புறப்படும். திருவனந்தபுரத்தில் மாலை 3:25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் மாலை 6:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.

இந்த ரயில் பாறசாலையிலும் நாங்குநேரியிலும் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும்போது 2023 ஆகஸ்ட் 23, 30 மற்றும் செப்டம்பர் 6ம் தேதிகளில் மாலை 3:58 மணிக்கு பாறசாலையிலும் மாலை 5:30 மணிக்கு நாங்குநேரியிலும் நின்று புறப்படும். மறுமார்க்கமாக வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும்போது அதிகாலை 4:37 மணிக்கு நாங்குநேரியிலும் அதிகாலை 6:10 மணிக்கு பாறசாலையிலும் நின்று புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசியுங்கள்:சிறுகதை: யாருமில்லாதவர்கள்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-இல் பின்தொடருங்கள்

High Lights Studio