வாழ்வியல்: தர்மம் பெருகியிருக்கிறதா?

வாழ்வியல்: "இப்படித்தான் சார்… நாங்க போறோமே சாமியார் அவர் வீட்ல வர்றவங்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டுகிட்டே இருப்பாங்க… மூடை மூடையாய் அரிசி இருக்கும் பாத்துக்கிடுங்க…"
Spread the love

வாழ்வியல்: பேருந்து சென்றுகொண்டிருந்தது.

“சார், இப்போ தர்மமெல்லாம் பெருகிப் போச்சு” என்றார் ஒருவர்.

D Bros Media

“ம்ம்… ஆமா…” – தயக்கமாய் ஆமோதித்தார் இன்னொருவர்.

“இப்படித்தான் சார்… நாங்க போறோமே சாமியார் அவர் வீட்ல வர்றவங்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டுகிட்டே இருப்பாங்க… மூடை மூடையாய் அரிசி இருக்கும் பாத்துக்கிடுங்க…”

“அப்படியா… வர்றவங்க எல்லாருக்குமா சாப்பாடு?”

“ஆமா சார்… ஆனா அவரு காசு எதுவும் இல்லை… எல்லாம் மத்தவங்க குடுக்குறது…”

“அப்படியா…?”

“ஆமா சார்… சாப்பாடு போடுறாங்கன்னு தெரிஞ்சா… கொடுக்கிறாங்க சார்…”

“ஆங்…”

“தர்மம் சார்… இப்போ நாம ஒரு மாசம் ஐம்பது பேருக்கு சாப்பாடு போட்டா கூட, அது தெரிஞ்சா கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்க சார்… நாம அதை ஆர்கனைஸ் பண்ணனும்… அதுதான் கஷ்டம்…”

“இப்போ எல்லாம் ஏமாத்துறாங்க சார்…” என்றார் இன்னொருவர்.

“ஆமா… ஏமாத்துறவங்க இருக்கிறாங்க சார்… இல்லேங்கலை… ஆனா சாப்பாடு போட்டா, தர்மம் பண்ணினா குடுக்குறதுக்கு ஆளுங்க இருக்கிறாங்க,” என்றார் முதலாமவர்.

“தர்மம் ஏன் சார் பெருகுது… பாவம் பெருகிப்போச்சு சார்… சம்பாதிக்கிறான் பாவம் தொலையட்டும்னு தர்மம்னு கொட்டுறான்… நாம ஏன் சார் தர்மம் பண்ணனும்? நம்ம ஒழுங்கா இருக்கோம்…” என்றார் இரண்டாமவர்.

“பாவம்… அது எல்லோரும் பண்றதுதான்…” தயக்கமாய் கூறினார் மூன்றாம் நபர்.

“தெரியாம பண்றது இருக்கு சார்… இவனுங்க தெரிஞ்சே பண்றான்க… அதை தொலைக்க தர்மம்னு கொண்டு கொட்டுறானுங்க…” – இரண்டாமவர் சூடாக கூறினார்.

“ஆனா தர்மம் பெருகிப்போச்சு சார்…” – முதலில் கூறியவர் மீண்டும் கூறினார்.

பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. முதலாமவர், “வர்றேன் சார்… நாளைக்குப் பாக்கலாம்,” என்று இறங்கிக்கொண்டார்.

பேருந்து புறப்பட்டது.

“தர்மங்கறாங்க…” – தொடர்ந்தார் இரண்டாமவர்.

“ஆனா சார்… எங்கேயோ சாப்பாடுபோட குடுக்கறாரு… இப்படிப்பட்டவங்கள் அவங்க சொந்தக்காரங்க… தெரிஞ்சவங்க கஷ்டப்பட்டா உதவலாமே… அதை செய்யமாட்டாங்க… தர்மம்னு பண்றாங்க…” என்றார் முன்பு மூன்றாவதாக பேசியவர்.

“ஆமாமா…” இது இரண்டாமவர்.

“நான் சொல்லியிருப்பேன்… தப்பா எடுத்துக்குவாரே…” என்றார் மூன்றாமவர்.

இதையும் வாசியுங்கள்: வாழ்வியல்: வாழ்க்கை சூத்திரம்

உண்மையில் தர்மம் பெருகியிருக்கிறதா? எதற்காக தர்மம் செய்கிறோம்? உங்கள் கருத்தை கமெண்ட் செக்சனில் பதிவு செய்யுங்கள்.

இதுபோன்ற சிந்தனைகளை தொடர்ந்து வாசிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின்தொடருங்கள்

High Lights Studio