தைப்பூசம் சிறப்பு ரயில்

தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை - பழனி இடையே 2024 ஜனவரி 24 (புதன்) மற்றும் 25 (வியாழன்) ஆகிய இரு நாள்களும் முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளைக் கொண்ட ரயில் இயங்கும்.
Spread the love

தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 2024 ஜனவரி 24 (புதன்) மற்றும் 25 (வியாழன்) ஆகிய இரு நாள்களும் இந்த ரயில் இயங்கும்.


இந்த ரயில் முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளைக் கொண்டது. புதன், வியாழன் ஆகிய இரு தினங்களும் காலை 6 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாதுறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக சென்று காலை 8:30 மணிக்கு பழனியை அடையும்.

D Bros Media


மறுமார்க்கமாக புதன், வியாழன் ஆகிய இரு தினங்களும் மாலை 5:45 மணிக்கு பழனியிலிருந்து புறப்பட்டு இரவு 8:15 மணிக்கு மதுரையை வந்தடையும்.


இந்த ரயிலில் 15 பொதுப் பெட்டிகள் மற்றும் சுமைக்கான பெட்டிகள் 2 ஆகியவை இருக்கும். தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை, சோழவந்தான், அம்பாதுறை மற்றும் திண்டுக்கல் பகுதியில் வசிக்கும் பக்தர்கள் இந்தச் சிறப்பு ரயில் மூலம் பயன்பெறலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்; எக்ஸ்-ல் பின் தொடருங்கள்

High Lights Studio